Navagraha Stotram (veyuru tholi pangan)

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம் 
(நவக்கிரகத் தோத்திரம் )

நவக்கிரகத்தால் பீடிக்கப்பட்டோர் இப்பதிகத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்தால் கிரகதோஷம் நீங்கும், நன்மை பெருகும். 

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. (1 )

என்போடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றோடு ஏழு பதினெட்டோடு ஆறும் உடனாய நாள்கள் அவைதாம்
அன்போடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (2 )

உருவளர் பவள மேனி ஒளிநீரு அணிந்து உமையோடு வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (3)



மதிநுதன் மங்கையோடு வடபால் இருந்து  மறையோதும் எங்கள் பரமன்
நதியோடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (4 )

நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமு இடியும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (5)

வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
கோள் அறி உழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (6)

செப்பிள முளை நன் மங்கை ஒருபாகம் ஆகா விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (7 )

வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடு உடனாய்
வான்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஏழ் கடல் சூழ் இலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (8 )

பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசு ஏறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும்மாலும் மறையோடு தேவர் வருகாலம் ஆன பலவும்
அலைகடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (9 )

கொத்தவர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (10)

தேன் அமர் பொழில்கொள் ஆளை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணைநமதே (11)

திருச்சிற்றம்பலம்

2 comments:

  1. nandu very good i got the prize in memorising this slokas when i was 10 yrs old. 4th std. daily i tell this slokas.
    sairam

    ReplyDelete
  2. Yeah, I know you like this sloka, Ma. Glad to know that you even got a prize :)

    ReplyDelete

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.