முனிவர்கள் தேவ ரேழு மூர்த்திகள் முதலி னோர்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ?
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறுஞ்
சனியனே உனைத் துதிப்பேன் தமியனேற்கு அருள்செய் வாயே
கோரிய உலகத் தின்கண் குலவிய உயிர்கட் கெல்லாம்
மீறிடச் சுகம ளித்து மெய்தளர் பிணியை நீக்கிச்
சீரிய துன்பந் தீர்ந்து சிறக்கத்தீர்க் காயுள் நல்கும்
காரியின் கமல பாதக் கடிமலர் தலைக்கொள் வோமே
கதிரின் சேயே சனைச் சரனே
கண்கள் அகன்று நெடு உடலுடையாய்
துதிசிவன் நேயா துவள் நடையாய்
துயரம் தீர்ப்பாய் சனைச் சரனே.
ஓம் சங் சனிதேவாய நம:
Superb
ReplyDelete