I learnt this song from my mom. This is from Tiruppugazh and is on Tiruthani Murugan.
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செருத்தவ ருயிர்க்கும் - சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் - றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் - பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொறுப்பையு மிடிக்கும்
நிறைம்புக ழுரைக்குஞ் - செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் - தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்கும்
தளத்துட னடக்கும் - கொடு சூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் - கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் - பெருமாளே.
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் - தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்கும்
தளத்துட னடக்கும் - கொடு சூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் - கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் - பெருமாளே.
No comments:
Post a Comment
Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.