~ ஸ்ரீ ரமண மஹரிஷி அருளியது~
அப்பளப் பாட்டு
பல்லவி
அப்பள மிட்டுப் பாரு - அத்தைச்
சாப்பிட்டுன் னாசையைத் தீரு.
appaḷam iṭṭu pāru-atthai
chāppiṭun āsaiyai thīru.
அனுபல்லவி
இப்புவி தன்னி லேங்கித் திரியாமற்
சற்போ தசுக சற்குரு வானவர்
செப்பாது சொன்ன தத்துவ மாகிற
வொப்புயர் வில்லா வோர்மொழி யின்படி (அப்பள)
ip-puvi thannil ēṅgi thiri-yāmal
saṛbōḍha sukha saḍguru vānavaṛ
cheppāḍhu chonna tatthuva māgiṛa
oppuyar villā vōr-mozhi yinpaḍi
Instead of wandering this earth, wearied by longing for peace
follow the incomparable Word of the sadguru pointing to Truth,
roll-out the Papads and see for yourself !
சரணங்கள்
1. தானல்லா வைங்கோச க்ஷேத்ரமிதில்வளர்
தானென்னு மானமாந் தான்ய வுளுந்தை
நானாரென் ஞான விசாரத் திரிகையிற்
நானல்ல வென்றே யுடைத்துப் பொடித்து (அப்பள)
2. சத்சங்க மாகும் பிரண்டை ரசத்தொடு
சமதம மாகின்ற ஜீரக மிளகுட
னுபரதி யாகுமவ் வுப்போ டுள்ளநல்
வாசனை யாம்பெருங் காயமுஞ் சேர்த்து (அப்பள)
sat-sanga-māgum piraṇḍai rasat-thōḍu
sama-dhama māginḍṛa jīraga-miḷa-guḍan
uparati yāgu-mav uppō ḍuḷḷa nal
vāsa-nai yām-peruṅ kāya-muñ chērtthu
Now mix the juice of the edible-cactus Pirandai
This is sat-sanga, the company of the elevating which removes discord
Add Jeera and Black-pepper which are Shama and Dama, equanimity and self-restraint
Toss in some salt of Uparati which is non-attachment
Round it off with Heeng which is good vāsanas, the tendencies which free us
3. கல்நெஞ்சி னானா னென்று கலங்காம
லுண்முக உலக்கையா லோயா திடித்து
சாந்தமாங் குழவியாற் சமமான பலகையிற்
சந்ததஞ் சலிப்பற சந்தோஷ மாகவே (அப்பள)
kal-neñjil nān-nān enḍṛu kalaṅ-gāmal
uḷmuka vulak-kaiyāl ōyā-dhiḍitthu
shānta-māṅ kuzha-viyāl sama-māna pala-gaiyil
san-thathañ chalip-paṛa santhōsha māgavē
With an inward turned pestle of mind pound away 'I-I'
Unrelenting at its stubborn out-going disobedience
Then with the rolling pin of Shanti, roll out on the platter of evenness
The Appalams and see for yourself !
4. மோனமுத் ரையாகு முடிவில்லாப் பாத்ரத்தில்
ஞானாக்னி யாற்காயு நற்பிரம்ம நெய்யதி
னானது வாகவே நாளும் பொரித்துத்
தானே தானாக புஜிக்கத் தன்மய (அப்பள)
mōna-mud dhrai-yagum muḍi-villāp pātthratthil
jñānāgni yāl-kāyum naṛ-bramma nei-yaḍil
nān-aḍhu vāgavē nāḷum porit-thu
thānē thānāga bujikka than-maya
Taking the bottomless vessel of endless-Mauna
With the wholesome oil of the One Self of all
Fired by the flames of wisdom's enquiring
Fry the Papads without let-up
Till the questioning self reaches and remains The Source
Thus you can have the papad and eat it too!
No comments:
Post a Comment
Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.