மாங்காடு காமாக்ஷி ஆறுவாரத் துதிப்பாடல்கள்
இரண்டாம் வாரப்பாடல்
பல்லவி
சுரத்தோடும் நயத்தோடும் பாடவரம் தருவாய்!
காஞ்சி காமகோடிபீடம் ஜகத்குரு வணங்கிடும் நீ (சுரத்தோடும்)
அனுபல்லவி
மாமரத் தோப்பினிலே மாங்காடு பகுதியினிலே
மாயமாய் மறைந்துநின்று ஆவின்பால் குடித்தவளே (சுரத்தோடும்)
சரணம்
இரண்டாம் வாரமிது இன்னல்கள் போக்கிடுவாய்
எலுமிச்சை மாறுதல்போல் என் மனதை மாற்றிடுவாய்
தாயே காமாக்ஷி தாங்கொணா துயர் துடைப்பாய்
தவக்கோலம் பூண்டவளே! தரணியெல்லாம் ஆள்பவளே (சுரத்தோடும்)
மாந்தரின் குறைதீர்க்கும் மங்கள ரூபிணியே
மாங்காடு பதிவாழும் துக்க நிவாரணியே
மங்களம் உண்டாக மனமுருகி வந்தேனே
சங்கரர் வழியினிலே சரணடைந்தேன் உன்னயம்மா (சுரத்தோடும்)

No comments:
Post a Comment
Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.