சாய் போற்றி


Download Sai Potri

(Source: Unknown)
முதலில் "ஓம்" என்றும் முடிவில் "போற்றி" என்றும் சேர்த்துக்கொள்ளவும்.

ஓம் சாயிநாதா போற்றி 
தக்ஷிணாமூர்த்தி தத்தாவதாரா
சாகர சாயியே 
பண்டரி புற விட்டலே
வெங்கடேச ரமணா 
கிருஷ்ண ராம சிவ மாருதி ரூபா
இறைவன் ஒருவனே என்பாய் 
பிறவிப் பிணி தீர்ப்பாய் 
மதங்களை கடந்த மஹானே
நாக சாயியே 
வேண்டுவோர் துயர் தீர்க்கும் யோகியே 
ஷீரடிவாசா சித்தேஸ்வரா 
அற்புதங்கள் செய்யும் ஆண்டவா 
முக்திக்கு வழி காட்டும் முனிவா 
உள்ளத்தின் உள்ளே உறைபவரே
ஆனந்தமயம் ஆனவரே 
யாமிருக்க பயமேன் என்பவரே 
விஷ்ணு நாம பாராயண பிரியரே 


சித்திரத்தில் உயிருடன் பேசும் தெய்வமே 
மாயையை விரட்டுபவரே 
கண் திருஷ்டி பில்லி சூனியம் தீர்ப்பவரே 
பிரம்ம ஞானம் அளிப்பவரே 
குருவரா தேவா 
சம்சார பயங்களை போக்குபவரே 
துனியின் உதியை மருந்து என்பாய் 
பிரார்த்தனைக்கு இளகுவாய்
எளிமை வடிவானாய் 
சகல சஞ்சாரியே
முக்காலமும் உணர்ந்தவரே 
மும்மூர்தியின் திருவடிவே 
சகல ஜீவன்களிலும் இருப்பாய் 
மூன்றாம் பிறையில் காட்சி தருவாய் 
முந்தைய வினைகளை அறுப்பவரே 
சாயிராம் மந்திரத்தின் சக்தியே 
மத வேறுபாடுகளை களைந்தாய் 
உண்மை அன்புக்கு மகிழ்பவரே 

ஷீரடி சாய்பாபாவே 
இல்லறமும் நல்லறமே என்றாய் 
இளமையிலே துறவியானாய்
உலகமெல்லாம் உன்நாமமே
தக்ஷிணை பிரியரே 
திக்கெட்டும் நீயே நிறைந்தாய் 
திக்கற்றோர்க்கும் நீயே 
சத் சரித சப்தாஹத்தில் அருள்வாய் 
தன தான்யம் அளிப்பாய் 
சிந்தையிலே விந்தை செய்வாய் 
கனவிலும் காட்சி அளித்தாய் 
நினைவிலும் காட்சி அளிப்பாய்
நீர் ஊற்றி விளக்கேற்றினாய் 
சாவடியில் சயனிக்கும் சத்குருவே 
த்வாரகாமாயி தெய்வமே 
மஹான்களின் தந்தையே 
ஆனந்த நிலையை அருள்வாய் 


நம்பிக்கை பொறுமையை காணிக்கையாய் கேட்பாய்
வென்கூசாவின் சீடரே
பலருக்கும் படியளிக்கும் பகவானே
வாக்கு பலிதம் தந்திடும் சரஸ்வதியே
வாழ்வாங்கு வாழ எம்மை வாழ்த்திடுவாய்
உனை மறவா வரம் தருவாய்
கலங்குவோர் மனம் களிக்க செய்பவரே
குழந்தை வரம் அருளும் குருவே
அன்னையாய் தந்தையாய் ஆதரிக்கும் அருளே
உங்கள் காலடியே எங்கள் ஷீரடியாம்
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வைப்பாய்
காம க்ரோத மத மாத்சர்யம் தீர்ப்பாய்
காசி பிரயாகையை காலடியில் காட்டியவரே போற்றி
தீபங்களை ஏற்றி பாவங்களை போக்குவாய்
தினம் தினம் த்யானிப்பவர்க்கு சாய் லக்ஷ்மி ரூபமானாய்

ஷீரடியே பண்டரீபுரம் என்றாய்
அன்பால் உலகம் முழுதும் ஒற்றுமை ஆக்கினாய்
ஐந்து பிராணன்களை ஜோதியாய் ஏற்றிவைத்தாய்
ஆரத்தி எடுப்பவரின் ஆறாத்துயர் தீர்ப்பாய்
அருளாசியை பிரசாதமாய் அளிப்பாய்
சுமைகளை ஏற்றி பகைமையை போக்குவாய்
கண்ணொளி தந்து காதொலி கேட்கச் செய்வாய்
சரணம் அடைந்தோர்க்கு கமல பதம் காட்டுவாய்
காலை ஆரத்தியில் கருணா மூர்த்தியாய் காட்சியளித்தாய்
நிலையான ஞானம் நிலைக்கச் செய்வாய்
ஷ்யாமா தாஸ்கனு மஹல்ஸா தத்யா சத்குருவே
அல்லா ஏசு அன்னை அனைத்துமானாய்
பக்திகேற்ப பலன் அளிப்பாய்
மனதிற்கேற்ப வாழ்க்கை துணை ஏற்க வைப்பாய்
எப்பிறவியிலும் உனை ஏற்க வைப்பாய்
யாகம் யோகம் ஏதுமின்றி மோக்ஷம் தரும் குருவே

எல்லா மதங்களும் என் ரூபமே என்பாய்
அன்னதானமே பிறவி நோய் தீர்க்கும் மருந்து என்பாய்
கூட்டு பிரார்த்தனையில் குலம் வாழவைப்பாய்
உன்னை போற்றுவோரை உலகம் போற்ற வைத்தாய்
இசையில் இணைந்து வருவாய்
அன்ன வஸ்த்ரங்களை அளவின்றி கொடுப்பாய்
கோதாவரி நதி தீரக் கோவில் கொண்டாய்
புட்டி மாளிகை அலங்கரிக்க முரளீதரன் ஆனாய்
வியாழ பூஜையில் வல்வினை நீக்கும் வியாழ மூர்த்தியே
பரந்தாமா பரமேஸ்வராய பரமாசார்ய
கண் கண்ட தெய்வமே கணபதியே

பௌர்ணமி பூஜையில் பாவங்களை அழித்து நற்பலன்களை தருவாய்
பாரிஜாத மலரே, கற்பகத்தருவே, காமதேனுவே
நவகோள்களால் நன்மையும் நா வன்மையும் பெற வைப்பாய்
தன்வினை நோய் தீர்க்கும் தன்வந்தரியே
மீனாக்ஷி பக்தனை நீ ஆட்சி செய்தாய்
நம்பினோரைக் கை விடாத நாயகனே
ராஜா ராம நாமமே தாரக மந்திரம் என்பாய்
அன்புக்கு அருள் நல்கும் அறிவே
ராதா கிருஷ்ண சீதா ராம லக்ஷ்மீ நாராயணா
ஸ்ரீனிவாச ஸ்ரீ வெங்கடேச ஸ்ரீ ரங்கா
சிவரூப ஹரிராஜ சுப்ரமண்யா
சகலமும் சத்குரு சாயிரூபமே

ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயிநாத் மகாராஜருக்கு ஜெய்!

No comments:

Post a Comment

Hari Aum! Thank you so much for taking your time to leave a message.You can also email me at JOYFULSLOKAS at GMAIL dot COM.

Bhagavad Gita

Bhagavad Gita
If you don't find the sloka PDF attached and would like to have one, kindly email me (joyfulslokas at gmail dot com) your request.