சண்முகர் நாமாவளி


 ஓம் சரவணபவ ஓம் 

கணபதிக்குத் தம்பியரே சண்முகா
கருணைசெய்ய வேண்டுமய்யா சண்முகா
பழனிமலை ஆண்டவனே சண்முகா
பாவமெல்லாம் தீர்ப்பவனே சண்முகா
குன்றக்குடி வேலவனே சண்முகா
குறைகளெல்லாம் தீர்ப்பவனே சண்முகா
திருச்செந்தூர் வேலவனே சண்முகா
திருவேலைப் பெற்றவனே சண்முகா
 திருவொற்றியூர் வேலவனே சண்முகா
திருவருள் புரிந்திடுவாய் சண்முகா
 திருகுன்றம் வேலவனே சண்முகா
திருமணம் ஆனவனே சண்முகா
 திருமலை ஆண்டவனே சண்முகா
திருப்புகழைப் பாடவந்தேன் சண்முகா
 தேனிமலை ஆண்டவனே சண்முகா
தினம்தினமும் நான் பணிவேன் சண்முகா
 வையாபுரி வேலவனே சண்முகா
வந்தவினை நீக்கிடுவாய் சண்முகா
 குமரமலை ஆண்டவனே சண்முகா
குழந்தை வடிவேலவனே சண்முகா
 விராலிமலை ஆண்டவனே சண்முகா
விரும்பினோர்க்கு அருள்புரிவாய்  சண்முகா
 தோகைமலை ஆண்டவனே சண்முகா
 துயரங்களை நீக்கிடுவாய் சண்முகா

 கந்தமலை ஆண்டவனே சண்முகா
கவலையெல்லாம் போக்கிடுவாய் சண்முகா
 சுவாமிமலை ஆண்டவனே சண்முகா
தந்தைக்கு உபதேசம் சொன்னவனே சண்முகா
 திருத்தணி வேலவனே சண்முகா
வழித்துணை வந்திடுவாய் சண்முகா
 எட்டுக்குடி வேலவனே சண்முகா
 தொட்டு வழிவிடுவாய் ஆண்டவனே
 வயலூர் வேலவனே சண்முகா
 வாலப்பிராய மாணவனே சண்முகா
 வடபழனி ஆண்டவனே சண்முகா
 வடிவேலைப் பெற்றவனே சண்முகா
 பழமுதிர்சோலை ஆண்டவனே சண்முகா
 பசித்தோர்க்கு அருள்புரிவாய் சண்முகா
என்கண் முருகனே சண்முகா
எங்கள்வினை தீர்த்திடுவாய் சண்முகா
 சிக்கல்வடி வேலவனே சண்முகா
சிக்கலெல்லாம் தீர்த்திடுவாய் சண்முகா
 மருதமலை ஆண்டவனே சண்முகா
மயில்மீது வந்துவடி வேலுங் கொண்டு 
மறக்காமல் வரம் தருவாய் சண்முகா
மனமொன்றி வணங்குகின்றோம் சண்முகா
  திருவொற்றியூர் முருகனே சண்முகா
சிந்தையெல்லாம் நிறைந்திடுவாய் சண்முகா.

   ஓம் சரவணபவ ஓம்

Bhagavad Gita

Bhagavad Gita