மாங்காடு காமாக்ஷி ஆறுவாரத் துதிப்பாடல்கள்
மூன்றாம் வாரப்பாடல்
நீ அருளாவிடில் வாழ்வேது காமாக்ஷியே
விளையாடல் சிவன் உடல் பாதி விளங்கும் (நீ அருளாவிடில்)
உனை வணங்காவிடில் நான் வாழ்வதேது
சங்கடங்கள் தீர்க்கும் தாயல்லவா - மன
சஞ்சலங்கள் போக்கும் மருந்தல்லவோ! (நீ அருளாவிடில்)
முக்காலமும் உணர்ந்த முதல் மணியே - என்
மூன்றாம் வாரமிதில் வரமளியே
நாற்படை வீட்டினிலே கொலுவிருக்கும்
நாயகியே! உயர் நவமணியே ! (நீ அருளாவிடில்)
எக்காலமும் எனக்குத் துணை நீயே - என்
ஏழு ஸ்வரங்களின் இசை நீயே
சிக்கெனப் பிடித்தேன் உன் திருவடியை - நீயும்
சீக்கிரம் காட்டிடுவாய் அருள்வடிவை (நீ அருளாவிடில்)
