சனிபகவான் கவசம்


ஓம் 

நெடுங்கிடு பிணியெலாம் 
நீக்கு நோன்மையும் 
ஒருங்கு மொய்ம்பு இரண்டும் 
ஆங்குறும் கருந்துகில் 
மருங்குலும் கழகிவர் 
வனப்பும் கொண்டு அமர்
அருங்கதிர் மதலை தாள்
அன்போடு ஏத்துவோம்!
...........
காக ஊர்தியனே காக்க 
கருத்தனே ஒருவா காக்க 
நாக வாபரணன் தந்த 
நல்லருள் நீயே காக்க 
மோகமே இல்லா வண்ணம் 
மூர்த்தியே நீயே காக்க 
ஆகமோர் முடமே கொண்ட 
ஆண்டவர் அன்பில் காக்க 
வேகமாம் பகழி தன்னில் 
வேலனாய் உன்கை காக்க 
நாகமே வில்லாய்க் கொண்ட 
நாயகன் கண்ணே காக்க 
வேகமாய் நளனுக் கன்று 
விரைந்தவா என்னைக் காக்க 
ஆகமாய் உயிராய் ஆளும் 
அலிக்கிரகமேநீ காக்க 

 எள்ளருகரிய தான
எழிற்குவ ளையை வேண்டும் 
வள்ளலே காக்க நீயே 
வளர்சிகை என்றும்  காக்க 
உள்ளமாய் வாழ்வாய் உண்மை 
உரைப்பவா உரிமை  காக்க 
கள்ளமில் மனமே கொண்ட 
கனியெனும் பரமே  காக்க 
உள்ளவோர் வன்னி தன்றன் 
ஒளிவடி வினனே  காக்க 
எள்ளினில் வாழும் எங்கள்
இறைவா என்றும் காக்க 
உள்மகிழ் கழுகில் ஊர்ந்த
உரிமையே என்றும்  காக்க 
எள்ளறு சிறப்பின் மிக்கன்
எமன்துணை நீயே  காக்க 

நீலமே அணியும் எங்கள் 
நீலனே நினைந்து  காக்க 
ஆலமே ஓர்ந்த ஈசன் 
அளித்த நல் கரும்பே  காக்க 
சீலமே உண்மை என்ற 
சிறப்பெனை என்றும்  காக்க 
கோலமார் இரும்பை வேண்டும் 
குவலயம் காக்கும் தேவே 
வேளையும் விளைவும் ஆன
விபுவெனை விரும்பிக்  காக்க 
நாளுமோர் கோலம் கொள்ளும் 
நல்லாற்றன் நயந்து காக்க 
வேளெனும் கருவேள் கொள்ளும் 
விந்தையில் என்னைக்  காக்க 
சூளினைப் பொய்ப்பிக் கின்ற 
சுந்தரச் சனியே  காக்க 

சூரியன் புதல்வா காக்க 
சுதந்தரப் பிரியா காக்க 
ஆரியர் வெருவி ஓட
அருந்திறல் நீயே காக்க 
தூரியர் கருணை கொண்ட 
தூயனே மகிழ்ந்து காக்க 
வேரியங் கமலை போற்றும் 
விந்தைநீ என்றும் காக்க 
சோரியில் காக்க என்றன்
சுந்தர அழகில் காக்க 
ஏரியில் கிணற்றோ ரத்தே
எந்தையே என்றும் காக்க 
நாரியர் செய்த தீமை 
நாடகம் தன்னில் காக்க 
கூறிய அறிவில் காக்க 
கொள்கையில் உறுதி காக்க 

மந்தனே காக்க  எந்தன் 
மதிதனம் விதியே காக்க 
விந்தையே காக்க எங்கள்
வேந்தனே ஆயுள் காக்க 
சொந்தமே காக்க எங்கள் 
சுவர்க்கமே நீதான் காக்க 
பந்தமே காக்க எங்கள் 
பரிதியஞ் செல்வன் காக்க 
முடவனே காக்க  என்னை
முழுதுமாய் நீயே காக்க 
உடைமையே காக்க என்னை
உயிருடன் நீயே காக்க 
கொடையனே காக்க எங்கள் 
குளிர்நிலா நீயே காக்க 
மடமையை நீக்கிக் காக்க 
மன்மதன் கணையிற் காக்க 

கோகத்தி நீக்கி யோன் என் 
கொள்கையை என்றும் காக்க 
ஆகத்தில் உள்ள எங்கள் 
ஆண்டவன் சனியே காக்க 
வேகத்தில் வேகம் நீக்கும் 
விமலனே விரைந்து காக்க 
நாகத்தில் விஷமே தந்த 
நல்லவன் என்றும் காக்க 
பக்கத்தில் பெண்ணைக் கொண்ட
பரமனின் பரிவே காக்க 
மோகத்தில் தவிப்போருக்கே 
மூர்க்கமே என்னைக் காக்க 
நாகத்தில் நாகமான 
நல்லாற்று ஈசன் காக்க 
ஆகத்தில் துன்பம் துக்கம் 
அருந்தசை தன்னில் காக்க 

சாயையின் மகனே காக்க 
மாயையில் நீயே காக்க 
போயொரு வரையும் வேண்டாப் 
பொறையனே நீயே காக்க 
வாயொரு பொய்யே சொல்லும்
வார்த்தையைத் தருவோன் காக்க 
சேயினைக் காக்க எங்கள் 
செந்தமிழ் அன்பைக் காக்க 
பாயினில் படுக்கை தன்னில் 
பார்கவன் நண்பன் காக்க 
நோயினில் வீழா வண்ணம் 
நுணுகியே நீயே காக்க 
பேய் எனைத் தொடரும் போது
பின்வந்து முன்னம் காக்க 
நாயேன அலையா வண்ணம் 
நாயக நற்றாள் காக்க 

காக்கவே கருணை காக்க 
கண்ணுதல் கனிவே காக்க 
நோக்கமே காக்க எங்கள்
நுண்மையே நுணுகிக் காக்க 
ஆக்கமும் வாழ்வும் நல்ல
ஆயுளும் தருவோன் காக்க 
வீக்கமும் வாரா வண்ணம் 
விபுவென வென்னைக் காக்க 
ஊக்கமும் நல்கி என்றன் 
உரிமையே ஆயுள் காக்க 
ஏக்கமும் அடையா வண்ணம்
என்னலம் என்றும் காக்க 
பாக்களில் களிகொள் வோனாம்
பார்கவன் நண்பா நீதான் 
தீக்களில் பெரிய தீயாம் 
தீமையில் என்னைக் காக்க 

கோள்களின் மகுடம் நீயே 
கொற்றவ நீயே காக்க 
நாளெனப் பொழுதாய் ஆன 
நற்றவம் நீயே காக்க 
வேளவர் வினையினாலே 
விளைந்திடாக் கீர்த்தி சேர்த்த 
மூலவன் நீயே எங்கள்
முதல்வனே எம்மைக் காக்க 
அக்கினி வண்ணர்க் கன்று 
அளித்தவா அதுபோல் காக்க 
தெக்கணம் எங்கும் நின்று 
திகழ்பவர் அன்பில் காக்க 
முக்கணன் கருணைக் கொண்ட 
முதல்வனே நீயே காக்க 
திக்கினில் திக்காய் ஆன 
தேவ தேவனே நீ காக்க.
......ஓம்.....

Please read "Shani Bhagavan Thuthi" here
Another version of Shani Kavacham given here

Bhagavad Gita

Bhagavad Gita