துக்க நிவாரண அஷ்டகம்

மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியள் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

கானுறு மலரெனக் கதிர் ஒளிர் காட்டிக் காத்திட வந்தவளே
தாணுறு தவஒளி தாரொளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நற் துர்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

தண தண தந்தன தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கண கண கங்கண கதிரொளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பண பண பம்பண பறையொளி கூவிட கண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல்குமரியே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

எண்ணிய படி நீயருளிட வருவாய் எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளியதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரும் அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய துர்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

No comments:

Post a Comment

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita