Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Mangadu Kamakshi Thuthi Paadal: Week 6

  

 மாங்காடு காமாக்ஷி ஆறுவாரத் துதிப்பாடல்கள் 

ஆறாம் வாரப்பாடல் 

பல்லவி 

காஞ்சியில் மணக்கோலம் ...மாங்காட்டில் தவக்கோலம் 
கொண்டவள் காமாக்ஷி ...நீ தேவி..! (காஞ்சியில்)

அனுபல்லவி 
சங்கரரும் துதித்த...மாங்காடு பதியினிலே....! 
ஈஸ்வரனை வேண்டி அக்னியில் இருந்தவளே...! (காஞ்சியில்)

சரணம் 
நீ அந்த வேளை தன்னில் ... ஈஸ்வரன் கண்மூடி 
உலகினில் உதித்தாயோ ... எங்களுக் கருள்புரிய 
ஏனிந்த கோலமென்று ... நானறிந்தேனம்மா ...!
ஏழையெனைக் காக்க அவதரித்தாய்  அம்மா ....! (காஞ்சியில்)

ராகம் : பாகேஸ்ரீ 
ஆறாம் வார மிதில் பாலோடு பழம்கொணர்ந்தேன் 
நினைத்தது நடக்குமென்று கூறாய் இது தருணம் 
பாசமுடன் நானே பலவோர்க்கும் ஈந்திடுவேன் ...!
நேசமுடன் உனக்கு நான்வைத்த பாலினையே ...! (காஞ்சியில்)

Mangadu Kamakshi Thuthi Paadal: Week 5

 

மாங்காடு காமாக்ஷி ஆறுவாரத் துதிப்பாடல்கள் 

ஐந்தாம் வாரப்பாடல் 

அஞ்சுதல் வேண்டாமய்யா -- இந்த
அம்மனைத் துதிப்போர்க்கு ஆகாததில்லையய்யா --
கெஞ்சுதல் வேண்டுமய்யா -- நாம்
கேளாத வரம்கூடக் கொடுத்திடும் தெய்வமய்யா! -- (அஞ்சுதல்)
                                                                                                         
நல்நெஞ்ச முடையோர்க்கு நாளெல்லாம் நலமளிப்பாள்
கல்நெஞ்ச முடையோர்க்கும் காத்திருந்து அருள்புரிவாள்
உள்நெஞ்சி லொன்றுவைத்து புறமொன்றில் பேசுவோர்க்கும் -- வரம்
அருள் நெஞ்சமுடையவளாம் மாங்காடு அம்மனவள்! -- (அஞ்சுதல்)

ஓர்கையில் கிளியோடும் மறுகையில் கரும்போடும்
மங்கலக் காட்சிதரும் 'ஸ்ரீ சக்ரம்' உடையவளாம்
'ஐந்தாம் வார' மிதில்... ஐயங்கள் போக்கி நிற்கும் -- புவி
ஆளும் நாயகியாம் ஆனந்த ரூபிணியாம்! -- (அஞ்சுதல்)

Mangadu Kamakshi Thuthi Paadal: Week 4


 மாங்காடு காமாக்ஷி ஆறுவாரத் துதிப்பாடல்கள் 

நான்காம்  வாரப்பாடல் 

பல்லவி 
அம்மனைப் போலொரு அருள்தரும் தெய்வம் 
அகிலதிலுண்டோ உன் சக்தி போலே  (அம்மனை)

அனுபல்லவி 
உன் தலம் நாடி வந்திடும் பக்தர்கோடி 
வந்தோர்க்கு வாழ்வளிக்கும் கலியுகக் கடவுளம்மா (அம்மனை)

சரணம் 
நல்நான்கு வேதங்கள் போற்றிடும் நாயகியே 
நான்காம் வாரமிதில் நலம்பல செய்திடுவாய் 
மணல்தனில் பித்தனின் உருவம் தனைத்தரித்து 
மணவாழ்க்கைக் கொண்டவளே மகிழ்வினை அளிப்பவளே (அம்மனை)

கிளிமொழி பேசிடும்  கிள்ளையைக் கொடுப்பவளே 
கரத்தினிலே கிளியுடனே துலங்கிடும் ஈஸ்வரியே 
எளியேனின் இசையினிலே இன்புறுவாய் நீயே 
எடுத்ததெல்லாம் வெற்றி கொடுத்திடும் காமாக்ஷி (அம்மனை)

Mangadu Kamakshi Thuthi Paadal: Week 3

 

மாங்காடு காமாக்ஷி ஆறுவாரத் துதிப்பாடல்கள் 

மூன்றாம்  வாரப்பாடல் 

நீ அருளாவிடில் வாழ்வேது காமாக்ஷியே 
விளையாடல் சிவன் உடல் பாதி விளங்கும்  (நீ அருளாவிடில்)

உனை வணங்காவிடில் நான் வாழ்வதேது 
சங்கடங்கள் தீர்க்கும் தாயல்லவா - மன 
சஞ்சலங்கள் போக்கும் மருந்தல்லவோ!  (நீ அருளாவிடில்)

முக்காலமும் உணர்ந்த முதல் மணியே  - என் 
மூன்றாம் வாரமிதில் வரமளியே 
நாற்படை வீட்டினிலே கொலுவிருக்கும் 
நாயகியே! உயர் நவமணியே !  (நீ அருளாவிடில்)

எக்காலமும் எனக்குத் துணை நீயே - என் 
ஏழு ஸ்வரங்களின் இசை நீயே 
சிக்கெனப் பிடித்தேன் உன் திருவடியை - நீயும் 
சீக்கிரம் காட்டிடுவாய் அருள்வடிவை (நீ அருளாவிடில்)

Mangadu Kamakshi Thuthi Paadal: Week 2

மாங்காடு காமாக்ஷி ஆறுவாரத் துதிப்பாடல்கள் 

இரண்டாம்  வாரப்பாடல் 

பல்லவி 
சுரத்தோடும் நயத்தோடும் பாடவரம் தருவாய்!
காஞ்சி காமகோடிபீடம்  ஜகத்குரு வணங்கிடும் நீ (சுரத்தோடும்)

அனுபல்லவி 
மாமரத் தோப்பினிலே மாங்காடு பகுதியினிலே 
மாயமாய் மறைந்துநின்று ஆவின்பால் குடித்தவளே (சுரத்தோடும்)

சரணம் 
இரண்டாம் வாரமிது இன்னல்கள் போக்கிடுவாய் 
எலுமிச்சை மாறுதல்போல்  என் மனதை மாற்றிடுவாய் 
தாயே காமாக்ஷி தாங்கொணா துயர் துடைப்பாய் 
தவக்கோலம் பூண்டவளே!  தரணியெல்லாம் ஆள்பவளே  (சுரத்தோடும்)

மாந்தரின் குறைதீர்க்கும் மங்கள ரூபிணியே
மாங்காடு பதிவாழும் துக்க நிவாரணியே 
மங்களம் உண்டாக மனமுருகி வந்தேனே 
சங்கரர் வழியினிலே சரணடைந்தேன் உன்னயம்மா (சுரத்தோடும்)

Mangadu Kamakshi Thuthi Paadal: Week 1


மாங்காடு காமாக்ஷி ஆறுவாரத் துதிப்பாடல்கள் 

 முதல் வாரப்பாடல் 

அனாதை நான்... ஆதரிப்பாய் அம்மா ! 
அகிலாண்டநாயகியே..! ஆதி பராசக்தி நீயே... (அனாதை)

கவலை தீர்க்கும் கற்பகமாய் காஞ்சியிலே விளங்குகின்றாய் 
காலமெல்லாம் நலம் பெறவே காசியிலே வீற்றிருப்பாய்!
மானிடர்க்கு வாழ்வளிக்க மதுரையிலே அமர்ந்திருப்பாய் - நம் 
மனக்குறையைத் தீர்ப்பதற்கே மாங்காட்டில் வடிவெடுத்தாய் (அனாதை)

ஆறுவாரம் தொடர்ந்து வந்து வணங்கிடுவேன்  உன்னையம்மா  - 
அருள்மாரி பொழிந்திடுவாய் அகத்தினிலே நிறைந்திடுவாய்...!
என்குறையை நீயறிவாய் என்துயரம் நீ உணர்வாய்!
உன்பதமே என்னிதயம் எந்நாளும் நினைக்கச் செய்வாய் (அனாதை)

தாயுமுண்டு தந்தையுண்டு பந்தமுண்டு பாசமுண்டு 
யாரிருந்தும் என்னப்பயன் தாயே உன் அருளிலையேல்...
சேயாக ஏற்றிடுவாய் சேவடி வணங்குகின்றேன்!
தாய் சேயை அணைப்பதுபோல் அரவணைத்துக்  காத்திடுவாய்  (அனாதை)

Sri Ramaraksha Stotram (Tamil)

Sanskrit Version 

ஸ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரம் 
(கௌசிக முனிவர் ) 

ஓம் ஸ்ரீ கணேசாய நம:
அஸ்ய ஸ்ரீ ராமரக்ஷாஸ்தோத்ர மந்த்ரஸ்ய 
அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ ஸீதா ராமசந்த்ரோ தேவதா 
ஸீதா சக்தி: ஸ்ரீமத் ஹனுமான் கீலகம் 
ஸ்ரீ ராமச்சந்த்ர ப்ரீத்யர்த்தே ராமரக்ஷா ஸ்தோத்ர ஜபே விநியோக:

த்யானம் 
த்யாதேதாஜானுபாஹும் த்ருதசரதனுஷம் பத்த பத்மாஸனஸ்தம் 
பீதம் வாஸோ வஸானம் நவகமலதலஸ்பர்திநேத்ரம் ப்ரஸன்னம் 
வாமாங்காரூட ஸீதாமுககமல மிலல்லோசனம் நீரதாபம் 
நானாலங்காரதீப்தம் தததமுருஜடாமண்டலம் ராமசந்த்ரம் 

 ஸ்தோத்ரம் 
சரிதம் ரகுநாதஸ்ய சதகோடி ப்ரவிஸ்தரம் 
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக நாசனம்  (1)

த்யாத்வா நீலோத்பல ச்யாமம் ராமம் ராஜீவலோசனம் 
ஜானகி லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மண்டிதம் (2)

ஸாஸிதூண தனுர்பாண பாணிம் நக்தம் சராந்தகம் 
ஸ்வலீலையா ஜகத்ராத்துமாவிர்பூதமஜம் விபும் (3)

ராமரக்ஷாம் படேத் ப்ராக்ஞ: பாபக்னீம் ஸர்வகாமதாம்
சிரோ மே ராகவ: பாது பாலம் தசரதாத்மஜ: (4)

கௌஸல்யேயோ த்ருசௌபாது விச்வாமித்ரப்ரிய: ச்ருதி 
க்ராணம் பாது மகத்ராதா முகம் ஸௌமித்ரிவத்ஸல: (5)

ஜிஹ்வாம் வித்யாநிதி : பாது கண்டம் பரதவந்தித : 
ஸ்கந்தெள திவ்யாயுத : பாது புஜெள பக்னேசகார்முக : (6)

கரௌ ஸீதாபதி : பாது ஹ்ருதயம் ஜாமதஞஜித் 
மத்யம் பாது கரத்வம்ஸி நாபிம் ஜாம்பவதாச்ரய : (7)

ஸுக்ரீவேச: கடீ பாது ஸக்தினீ ஹனுமத் ப்ரபு:
ஊரூ ரகூத்தம: பாது ரக்ஷ: குல விநாசக்ருத் (8)

ஜானுனீ ஸேதுக்ருத்பாது ஜங்கே தசமுகாந்தக :
பாதெள விபீஷண ஸ்ரீத: பாது ராமோக்கிலம் வபு: (9)

ஏதாம் ராமபலோபேதாம் ரக்ஷாம்  ய: ஸுக்ருதி படேத் 
ஸ சிராயு: ஸுகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத் (10)

பாதாள பூதள வ்யோம சாரிணச்சத்மசாரிண:
ந த்ரஷ்டுமபி சக்தாஸ்த்தே ரக்ஷிதம் ராமநாமபி: (11)

ராமேதி ராமபத்ரேதி ராமசந்த்ரேதி வா ஸ்மரன் 
நரோ ந லிப்யதே பாப்பை: புக்திம் முக்திம் ச விந்ததி (12)

ஜகஜ்ஜை த்ரைக மந்த்ரேண ராமநாம்நாபி ரக்ஷிதம் 
ய: கண்டே தாரயேத்தஸ்ய கரஸ்தா: ஸர்வ ஸித்தய: (13)

வஜ்ரபஞ்சரநாமேதம் யோ ராமகவசம் ஸ்மரேத்
அவ்யாஹதாஞ ஸர்வத்ர லபதே ஜயமங்கலம் (14)

ஆதிஷ்ட்டவான் யதா ஸ்வப்னே ராமரக்ஷாமிமாம் ஹர:
ததா லிகிதவான் ப்ராத: ப்ரபுத்தோ புதகௌசிக: (15)

ஆராம: கல்பவ்ருக்ஷாணாம் விராம: ஸகலாபதாம் 
அபிராமஸ்த்ரிலோகானாம் ராம: ஸ்ரீமான் ஸ ந: ப்ரபு: (16)

தருணெள ரூபஸம்பன்னெள ஸுகுமாரௌ மஹாபலௌ 
புண்டரீக விசாலாக்ஷௌ சீரகிருஷ்ணாஜினாம்பரௌ (17)

பலமூலாசினெள தான்தௌ  தாபஸௌ ப்ரம்மசாரினெள
புத்ரௌ தசரதஸ்யைதௌ ப்ராதரௌ ராமலக்ஷ்மணெள(18)

சரண்யௌ ஸர்வஸத்வானாம்  ச்ரேஷ்டௌ ஸர்வதனுஷ்மதாம் 
ரக்ஷ: குலநிஹந்தாரோ த்ராயேதாம் நோ ரகூத்தமௌ (19)

ஆத்தஸஜ்ஜதனுஷா விஷு ஸ்ப்ருசா வக்ஷயாசுக நிஷங்க ஸங்கினெள
ரக்ஷணாய மம ராமலக்ஷ்மணாவக்ரத: பதி ஸதைவ கச்சதாம் (20)

ஸன்னத்த: கவசீ கட்கி சாப-பாண-தரோ யுவா 
கச்சன்மனோரதோஸ்மாக்கம் ராம: பாது ஸ லக்ஷ்மண: (21)

ராமோ தசரதி: சூரோ லக்ஷ்மணானுசரோ பலீ  
காகுஸ்த: புருஷ: பூர்ண: கௌஸல்யேயோ ரகூத்தம : (22)

வேதாந்தவேத்யோ யஜ்ஞேச: புராணபுருஷோத்தம:
ஜானகிவல்லப: ஸ்ரீமான் அப்ரமேய பராக்ரம: (23)

இத்யேதானி ஜப்பன்நித்யம் மத்பக்த:ச்ரத்தயான்வித:
அச்வமேதாதிகம் புண்யம் ஸம்ப்ராப்னோதி ந சம்ஷய: (24)

ராமம் தூர்வாதலச்யாமம் பத்மாக்ஷம் பீதவாஸஸம் 
ஸ்துவந்தி நாமபிர்திவ்யய்: ந தே ஸம்ஸாரிணோ நரா: (25)

ராமம் லக்ஷ்மணபூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் ஸுந்தரம் 
காகுஸ்தம் கருணார்ணவம் குணநிதிம் விப்ரப்ரியம் தார்மிகம் 
ராஜேந்த்ரம் ஸத்யஸந்தம் தசரததனயம் ச்யாமளம் சாந்தமூர்த்திம் 
வந்தே லோகாபிராமம் ரகுகுலதிலகம் ராகவம் ராவணாரிம் (26)

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே 
ரகுநாதாய நாதாய சீதாயா: பதயே நம  (27)

ஸ்ரீ ராம ராம ரகுநந்தன ராம ராம 
ஸ்ரீ ராம ராம பரதாக்ரஜ ராம ராம 
ஸ்ரீ ராம ராம ரணகர்கச ராம ராம 
ஸ்ரீ ராம ராம சரணம் பவ ராம ராம (28)

ஸ்ரீராமசந்த்ர சரணெள மனஸா ஸ்மராமி 
ஸ்ரீராமசந்த்ர சரணெள வசஸா க்ருணாமி 
ஸ்ரீராமசந்த்ர சரணெள சிரஸா நமாமி 
ஸ்ரீராமசந்த்ர சரணெள சரணம் ப்ரபத்யே (29)

மாதா ராமோ மத்பிதா ராமச்சந்த்ர:
ஸ்வாமி ராமோ மத்ஸகா ராமச்சந்த்ர:
ஸர்வஸ்வம் மே  ராமச்சந்த்ரோ தயாலு:
நான்யம் ஜானே நைவ ஜானே ந ஜானே (30)

தக்ஷிணே லக்ஷ்மணோ யஸ்ய வாமே து ஜனகாத்மஜா 
புரதோ  மாருதிர்யஸ்ய தம் வந்தே ரகுநந்தனம் (31)

லோகாபிராமம் ரண ரங்க தீரம் 
ராஜீவநேத்ரம் ரகுவம்சநாதம் 
காருண்யரூபம் கருணாகரம் தம் 
ஸ்ரீரமச்சந்திரம் சரணம் ப்ரபத்யே  (32)

மனோஜவம் மாருத-துல்ய-வேகம் 
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் 
வாதாத்மஜம் வானரயூதமுக்யம் 
ஸ்ரீராமதூதம் சரணம்  ப்ரபத்யே (33)

கூஜன்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் 
ஆருஹ்யகவிதாசாகாம் வந்தே வால்மீகி கோகிலம் (34)

ஆப்பதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம் 
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் (35)

பர்ஜனம் பவ பீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம் 
தர்ஜனம் யம தூதானாம் ராம ராமேதி கர்ஜனம் (36)

ராமோ ராஜாமணி: ஸதா விஜயதே ராமம் ரமேசம் பஜே 
ராமேணாபிஹதா நிசாசரமூ ராமாய தஸ்மை நம:
ராமா நாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸ்யோஸ்ம்யஹம் 
ராமே சித்தலய: ஸதா பவது மே போ ராம மாமுத்தர (37)

ஸ்ரீராம ராமராமேதி ரமே ராமே மனோரமே 
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே (38)

இதி ஸ்ரீ புத கௌசிகரிஷி விரசிதம் ஸ்ரீராமரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் 

ஸ்ரீ ஸீதா ராமச்சந்த்ரார்பணமஸ்து 

~ ஹரி: ஓம் ~

Muthaitharu (முத்தைத்தரு)


This is from Tiruppugazh (ThiruvaruNai).

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்

(முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல்  இது.)
 

முத்தைத்தரு பத்தித் திருநகை 

அத்திக்கிறை  சத்திச் சரவண 

முத்திக்கொரு வித்துக் குருபர  ..... எனவோதும் 


முக்கட்பர மற்குச் சுருதியின் 

முற்பட்டது  கற்பித் திருவரும் 

முப்பத்துமு வர்க்கத் தமரரும்  ...... அடிப்பேணப் 


பத்துத்தலை  தத்தக்  கணைதொடு 

ஒற்றைகிரி  மத்தைப்  பொருதொரு 

பட்டப்பகல்  வட்டத்  திகிரியில் ...... இரவாகப் 


பத்தற்கிர தத்தைக் கடவிய 

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் 

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே 


தித்தித்தெய ஒத்தப் பரிபுர 

நிர்த்தப்பதம்  வைத்துப் பயிரவி 

திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத் 


திக்குப்பரி அட்டப் பயிரவர் 

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு 

சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக் 


கொத்துப்பறை கொட்டக் களமிசை 

குக்குக்குகு குக்குக் குகுகுகு 

குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை 


கொட்புற்றெழ நட்பற் றவுணரை 

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி 

குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

நடராஜ பத்து (Nataraja Patthu)



நடராஜ பத்து


மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நான்கின் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவன் நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, ருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே ன் குறைகள் யார்க்கு உரைப்பே‎‎ன்,
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(அனைத்துமாகி நின்ற நடராஜரைப் போற்றுவதாக அமைந்தது.)


மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
ஞான சம்பந்தரோடு இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி துவேளை, விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(ஸ்ரீ நடராஜரின் நடனத்தை நம் கண்முன்னே நிறுத்தும் பாடலாக அமைந்தது)



கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி,
காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமல் இரவு பகலும்
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே!
தடமென்ற இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(மனித வாழ்வின் சிக்கல்களை நீக்க வேண்டி பாடுவதாக அமைந்தது)


வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல
பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல
ன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல
ன்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்
ஈசனேசிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(மாந்த்ரீகம், சித்தர்கள் பற்றி கூறியுள்ள பாடல்) 


நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ
சந்ததமுன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுகன் அறு முகன் இருபிள்ளை இல்லையோ தந்தை நீ மலடுதானோ,
விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ
இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(நிந்தா ஸ்துதியில் அமைந்த பாடல்)


வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும்
மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும் மூர்க்கனேன் முகடாகினும்
மோசமே செய்யினும் தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும்
பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ பார்த்தவர்கள் சொல்லார்களோ
பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ பாலகனை காக்கொணாதோ
எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(குறைகளற்ற வாழ்வை பெற வேண்டுவதாக அமைந்த பாடல்) 


அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழுவனோ
முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமென்று உணர்வனோ
தன்னை நொந்தழுவனோ ன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ
தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ
இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(முக்தியை வேண்டுவதாக அமைந்த பாடல்)


காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் இல்லை யென்றனோ
தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ
வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(செய்த பாபங்களை நீக்க வேண்டிய பாடல்) 


தாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி
தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன சீடர்கள் இருந்தும் என்ன,
சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன,
 நதிகளெல்லாம் ஓயாது மூழ்கினும் என்ன பலன்
எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ
இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.
யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.


இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ
இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ இதுவென்ன சாபமோ, இதுவே உன் செய்கைதானோ
இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங் கெடுவனோ,
ஓஹோ இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.



சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் இவரை,
சற்றெனக்குள்ளாக்கி ராசி பனிரெண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே
பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி
என்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங் கசக்கி,
கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழுதனாக்கி
இனியவள மருவுசிறு வனவை முனுசாமி எனை ஆள்வதினியுன் கடன் காண்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

திருச்சிற்றம்பலம்

Bhagavad Gita

Bhagavad Gita