சோதனை செய்து சாதனை புரிவாள்

Picture Source: www.mangadukamakshi.com

This song is on Goddess Kamakshi of Maangaadu (it means "Mango Forest" in Tamil) in Chennai. She is believed to have performed meditation there on Lord Shiva by standing on one leg (on her toe) and surrounded by agni. 

பல்லவி

சோதனை செய்து சாதனை புரிவாள் காமாக்ஷி
மன வேதனை தந்து போதனை அளிப்பாள் காமாக்ஷி (2)

அனுபல்லவி

நாதனை வேண்டி தீயினை வளர்த்தாள் காமாக்ஷி
தனை நம்பிய பேரின் தீமைகள் கலைவாள் காமாக்ஷி (சோதனை)

சரணம்

கன்னிப் பெண்களைக் காத்தருள் புரிவாள் காமாக்ஷி - நல்ல
கணவனைத்தந்து செல்வமும் அளிப்பாள் காமாக்ஷி
எண்ணிய படியே யாவையும் முடிப்பாள் காமாக்ஷி - வாழ்வில்
ஏற்றங்கள் மாற்றங்கள் தருவதும் அவளே காமாக்ஷி (சோதனை)

நெஞ்சத் தாமரை மலரில் இருப்பாள் காமாக்ஷி - நாம்
நேர்வழி சென்றிட பாதையும் அமைப்பாள் காமாக்ஷி
கொஞ்சிக் குலவிடும் மழலையும் ஆவாள் காமாக்ஷி - கொஞ்சம்
அழ அழச் செய்து பின் அற்புதம் செய்வாள் காமாக்ஷி (சோதனை)

No comments:

Post a Comment

Hari Aum! Thank you so much for taking your time to leave a message.You can also email me at JOYFULSLOKAS at GMAIL dot COM.

Bhagavad Gita

Bhagavad Gita
If you don't find the sloka PDF attached and would like to have one, kindly email me (joyfulslokas at gmail dot com) your request.