தாயான காமாக்ஷி காலடி


தாயான காமாக்ஷி காலடி

மாங்காட்டில் எடுத்து வைத்த காலடி - உயர்
மாமரத்தடியில் நின்ற காலடி...
பாங்கோடு பலனளிக்கும் காலடி
பணிந்தோரைக் காத்தருளும் காலடி - காலடி (மாங்காட்டில்)

சீரான வாழ்வு தரும் காலடி - எங்கள்
சிந்தையிலே நிறைந்துவிட்டக் காலடி
யாராலும் தொழுகின்ற காலடி - இனி
யாதொன்றும் குறைவென்ப தேதடி - ஏதடி (மாங்காட்டில்)

பரமசிவன் பத்தினியின்  காலடி - மனப்
பாபங்களைப் போக்கிவிடும் காலடி
வரமருளும் மாங்காட்டுக் காலடி - இந்த
வையகத்தில் இதற்கு நிகர் ஏதடி - ஏதடி (மாங்காட்டில்)

எடுத்ததெல்லாம் முடித்துவைக்கும் காலடி - இந்த
எழை என்னை வாழவைக்கும் காலடி
தடுத்தென்னை ஆட்கொண்டக் காலடி - எங்கள்
தாயான காமாக்ஷிக் காலடி - காலடி (மாங்காட்டில்)

~ ஓம் சக்தி ~

2 comments:

  1. I am heartened to sing this song in Raag Aanandha Bhairavi. In a couple of hours, i shall send the link.

    subbu thatha.
    www.subbuthatha.blogspot.com
    www.pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. Namaskaram,

      Glad to know that, Sir. Please do send that link.

      Hari Aum!

      Delete

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita