.....................
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியும் கோணாத கோலுமொரு துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே
Education that never fades and age that never diminishes,
Friendship free from deceit,
Ever-growing prosperity and unending youth,
A body without diseases,
A mind that doesn't falter,
A spouse who remains loving,
Children who do not stray,
Unfailing fame and unwavering words,
Generosity that faces no obstacles,
Wealth that never diminishes,
An unwavering honor,
A life free from sorrow,
Love and devotion at your pure feet,
In the company of great devotees,
You, the sister of the one who sleeps on the ocean of waves,
Life of Adikadavoor,
You, who share a part of the Lord Amudheeswarar,
O Abhirami with comforting hands, please bless us with your grace.
No comments:
Post a Comment
Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.