சனீச்வரன் கவசம்This slokam was contributed by a friend, Ms. Mohan.

கரு நிறக் காகம் ஏறி காசினி தன்னை காக்கும்
மா பெரும் க்ரஹமான ஒப்பற்ற சனியே
உந்தன் அருள் கேட்டு வணங்குகின்றேன்
ஆதரித்து என்னை காப்பாய்                       
----------------------------------------------------------------------
ஏழரைச் சனியாய் வந்தும் எட்டினில் இடம் பிடித்தும்
கோளாறு நான்கில் தந்தும் கொண்டதோர் கண்டகத்தில்
ஏழினில் நின்ற  போதும் இன்னல்கள் தரா வண்ணம்
ஞாலத்தில் என்னைக் காக்க நம்பியே தொழுகின்றேன் நான்

பன்னிரு ராசிகட்கும்  பாரினில் நன்மை  கிட்ட
எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறும்  வழிகள் காட்ட
எண்ணெயில் குளிக்கும் நல்ல  ஈசனே
உனை துதித்தேன் புண்ணியம் எனக்கு தந்தே 
புகழ் கூட்ட வேண்டும் நீயே
---------------------------------------------------------------------
கறுப்பினில் ஆடை ஏற்றாய் காகத்தில் ஏறி அமர்ந்தாய்
இரும்பினை உலோகமாக்கி எள் தனில் பிரியம் வைத்தாய்
அரும்பினில் நீல  வண்ணம் அணிவித்தால்  மகிழ்ச்சி கொள்வாய்
பெரும் பொருள் வழங்கும்   ஈசா பேரருள் தருக நீயே

சனியெனும் கிழமை கொண்டாய் சங்கடம் விலக வைப்பாய்
அணி திகழ் அனுஶம் பூசம் ஆன்றதோர் உத்திரட்டாதி 
இனிதே உன் விண்மீனாகும் எழில் நீலா மனைவியாவாள்
பணியாக உமக்கு ஆண்டு பத்தொன்பது என்று சொல்வர்

குளிகனை மகனாய் பெற்றாய் குறைகளை அகல வைப்பாய்
எழிலான சூரியனை உன் விழி பார்த்து பிடித்துக் கொள்வாய்
வினாயகர், அனுமன் தன்னை தொழுதாலோ விலகிச் செல்வாய்
தயாளனே அருளைத் தாராய்

அன்ன தானத்தின் மீது அளவிலாப் பிரியம் வைத்த 
மன்னனே சனியே உன்னை மனதாரப் போற்றுகின்றோம்
உன்னையே சரண் அடைந்தோம் உயர்வெல்லாம் எனக்கு தந்தே
மன்னர் போல் வாழ்வதற்கே மணியான வழி வகுப்பாய்
-----------------------------------------------------------------------------------
மந்தனாம் காரி நீலா மணியான மகர வாசா
தன்ததோர் கவசம் கேட்டே, சனியெனும் எங்கள் ஈசா
வந்திடும் துயரம் நீக்கு வாழ்வினை வசந்தம் ஆக்கு
எந்த நாள் வந்த போதும் இனிய நாள் ஆக மாற்று

ஸ்ரீ சனீச்வரன் கவசம் சம்பூர்ணம்.

3 comments:

 1. கரு நிறக் காகம் ஏறி காசினி தன்னை காக்கும்

  -------------------------------------------------------------------------------------------------------------
  மந்தனாம் காரி நீலா மணியான மகர வாசா
  தன்ததோர் கவசம் கேட்டே, சனியெனும் எங்கள் ஈசா
  வந்திடும் துயரம் நீக்கு வாழ்வினை வசந்தம் ஆக்கு
  எந்த நாள் வந்த போதும் இனிய நாள் ஆக மாற்று
  -------------------------------------------------------------------------------------------------------------
  ஸ்ரீ சனீச்வரன் கவசம் சம்பூர்ணம்.

  ReplyDelete
 2. Super. Continue the good work.

  ReplyDelete
  Replies
  1. Namaskaram,

   Thank you so much for your kind words of encouragement. God bless us all.

   Hari Aum!

   Delete

Hari Aum! Thank you so much for taking your time to leave a message.You can also email me at JOYFULSLOKAS at GMAIL dot COM.

Bhagavad Gita

Bhagavad Gita
If you don't find the sloka PDF attached and would like to have one, kindly email me (joyfulslokas at gmail dot com) your request.