விநாயகர் thuthi

 கைத்தல நிறைகனி யப்பமொடு அவல் பொறி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பக மெனவினைக் கடித்தேகும்

மற்றமும் மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொருள் திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்க்கோடு பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவனுறைரதம்
அச்சது போடி செய்த அதிதீரா

அத்துயரது கொடுசுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை யிபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.

2 comments:

 1. VERY GOOD POST.THIS WILL CERTAINLY IMPRESS THE READERS TO SPIRITUAL PATH.MY IMMENSE THANKS.
  M.Meyyappan.

  ReplyDelete
 2. Thank you so much for visiting this blog and for your kind words, Meyyappan ji.

  Hari Aum,
  Nandini

  ReplyDelete

Hari Aum! Thank you so much for taking your time to leave a message.You can also email me at JOYFULSLOKAS at GMAIL dot COM.

Bhagavad Gita

Bhagavad Gita
If you don't find the sloka PDF attached and would like to have one, kindly email me (joyfulslokas at gmail dot com) your request.