விநாயகர் துதி (kaithala niraikani)

 கைத்தல நிறைகனி யப்பமொடு அவல் பொறி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பக மெனவினைக் கடித்தேகும்

மத்தமும் மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொருள் திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்க்கொடு பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவனுறைரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா

அத்துயரது கொடுசுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை யிபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.

2 comments:

  1. VERY GOOD POST.THIS WILL CERTAINLY IMPRESS THE READERS TO SPIRITUAL PATH.MY IMMENSE THANKS.
    M.Meyyappan.

    ReplyDelete
  2. Thank you so much for visiting this blog and for your kind words, Meyyappan ji.

    Hari Aum,
    Nandini

    ReplyDelete

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita