துர்கா தேவியைத் துதிப்போமே நாமே
துன்பமெல்லாம் துடைத்திடுவாள் அம்மா தாயே துர்கா தேவி (துர்கா)
ராகுகால பூஜையை நீ ஏற்றுக்கொள்வாயே
நாங்கள் ரம்மியமாய் கேட்டவரம் தந்திடுவாயே
ஆனந்தமாய் அபிஷேகம் கண்டு களித்தோமே
எங்கள் குறைகளெல்லாம் சீக்கிரமே தீர்த்திடுவாயே துர்கா தேவி (துர்கா)
எத்தனைதான் அவதாரம் எடுத்தாலும் - அம்மா
அத்தனையும் கண்டுகளிக்க கண் கொடுத்தாயே
அன்புடனே நாங்கள் செய்யும் பூஜையும் தாயே - நீ
மறவாமல் ஏற்கவேண்டும் ஆதிஜோதியே துர்கா தேவி (துர்கா)
துர்க்கை என்று துதிப்பவரை துணைக் கொள்ளுவாயே
என்றும் என் அருகில் இருந்து நீயும் ஆதரிப்பாயே
உன் புகழை நான் என்றும் மறவேன் தாயே
உன் நாமம் என்றென்றும் பாடிடுவோமே துர்கா தேவி (துர்கா)
No comments:
Post a Comment
Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.