Parashakthi Thuthi


(பாரதியார் பாடல்)

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

கணபதி ராயன் - அவனிரு காலைப் பிடித்திடுவோம்
குணம் உயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடவே (ஓம்சக்தி)

சொல்லுக் கடங்காவே - பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம்
வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழி என்றே துதிப்போம் (ஓம் சக்தி)

வெற்றி வடிவேலன் அவனது வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல் (ஓம் சக்தி)

தாமரை பூவினிலே ஸ்ருதியை தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே கண்ணிலொற்றி புண்ணிய மெய்திடுவோம் (ஓம் சக்தி)

பாம்புத் தலைமேலே நடஞ்செய்யும் பாதத்தினை புகழ்வோம்
மாம்பழ வாயினிலே குழலிசை வண்மை புகழ்ந்திடுவோம் (ஓம் சக்தி)

செல்வத் திருமகளை திடங்கொண்டு சிந்தனை செய்திடுவோம்
செல்வம் எல்லாம் தருவாள் நமதொளி திக்கனைத்தும் பரவும் (ஓம் சக்தி)

2 comments:

  1. God bless your service..long live Hinduism
    Oum Sahthi Oum....

    ReplyDelete
  2. Hari Aum!

    Thank you so much for your kind words.

    Nandini

    ReplyDelete

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita