Showing posts with label தேவாரம். Show all posts
Showing posts with label தேவாரம். Show all posts

பன்னிரு திருமுறைகளில் பஞ்சாக்ஷரம்

          பன்னிரு திருமுறைகளில் பஞ்சாக்ஷரம்

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையினுந் துணை அஞ்செழுத்துமே.

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள் தொறும்
வஞ்ச மற்று அடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமச் சிவாயவே.

இமயன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓதவல்லார்தமை நண்ணினால்
நியமத்தார் நினைவார்க்கும் இனியன் நெற்றி
நயனன் நாமம் நமச் சிவாயவே.

நந்தி நாமம் நமச் சிவாய வெனும்
சந்தை யாற்றமிழ் ஞான சம்பந்தன் சொல்
சிந்தையான் மகிழ்ந்து ஏத்த வல்லாரெல்லாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே.

மந்திர நான் மறையாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே.

நல்லவர் தீயவர் எனாது நச்சினார்
செல்லல் எனச் சிவமுத்தி காட்டுவ
கொல்ல நமன் தமர்கொண்டு போமிடத்து
அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே.

                                - சம்பந்தர் தேவாரம் 3 ஆம் திருமுறை

Thodudaiyaseviyen Song


This was taught by my grandmom, Smt. R. Bhagyalakshmi. I am happy to have found this after so many years.

(தேவாரம்)
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளியது

தோடுடையசெவியென் விடையேறி ஓர் தூவெண் மதிசூடிக்
காடுடையசுடலைப்பொடி பூசி என்னுள்ளங் கவர்கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட்பனிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே.

முற்றலாமையிள நாகமோ டேனமுளைக்கொம்பவைபூண்டு
வற்றலோடு கலனாப்பலி தேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடையார் பெரியார்கழல்கையாற்றெழுதேத்தத்
பெற்றமூர்ந்த பிரமாபுரமேவிய பெம்மானிவ னன்றே.

அருநெறியமறை வல்ல முனியகன் பொய்கை அலர்மேய
பெருநெறிய பிரமாபுர மேவிய பெம்மான் இவன் தன்னை
ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே.

Kootrayina varu


My grand mom, Smt. R. Bhagyalakshmi, used to teach us a lot of songs on Shiva. We never used to write it down at that time and I forgot many of them. I am glad I found some of those songs now.
....................................
(தேவாரம்)
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது

கூற்றாயின வாறு விலக்ககிலீர் 
கொடுமைபல செய்தன நானறியேன் 
ஏற்றாயடிக்கேயிரவும் பகலும்
பிரியாது வணங்குவ னெப்பொழுதும் 

தோற்றாதென் வயிற்றி னகம்படியே 
குடரோடு துடக்கி முடக்கியிட 
ஆற்றே நாடியே னதிகைக் கெடில 
வீரட்டா னத்துறை யம்மானே 

போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் 
புறங்கா டரங்கா நட மாடவல்லாய் 
ஆர்த்தா னரக்கன்றனை மால்வரைக் கீழ் 
அடர்த்திட் தருள் செய்த வதுகருதாய் 

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் 
என்வேதனை யான விலக்கியிடாய் 
ஆர்த்தார் புனல்சூழதிகைக் கெடில
வீராட்டா னத்துறை யம்மானே

Pitha Piraisoodi


My grand mom, Smt. R. Bhagyalakshmi,  used to teach us a lot of songs on Shiva. We never used to write them down at that time and I forgot many of them. I am glad I found some of those songs now.
....................................
(தேவாரம்)


சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளியது 

பித்தா பிறை சூடி பெருமானேயருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால்வெண்ணெய் நல்லூரருட்டுறையுள்
அத்தாவுனக் காளாயினியல்லேன் எனலாமே

நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னைப்
பேயாயைத் திரிந்தெய்த்தேன் பெறலாகாவருள் பெற்றேன்
வேயார் பெண்ணைத் தென்பால்வெண்ணெய்  நல்லூரருட்டுறையுள்
ஆயாவுனக்  காளாயினியல்லேன் எனலாமே

காரூர்புன லெய்திக் கரை கல்லித்திரைக் கையால்
பாரூர் புகழெய்தித் திகழ்பன்மா மணியுந்திச்
சீரூர் பெண்ணைத் தென்பால்வெண்ணெய்  நல்லூரருட்டுறையுள்
ஆரூரெனம் பெருமாற் காளல்லேன் எனலாமே

Bhagavad Gita

Bhagavad Gita