Song on Shirdi Saibaba

I remember listening to this song while I was growing up. I don't have the cassette with me anymore but I thought I'd post it here before I forget it.
.......................................


நா மணக்க பாடிடுவோம் சாய் நாமமே - உன்னை
பூ மணக்க பூஜை செய்வோம் சாய் பகவானே (2)
தேன் மணக்கும் திவ்ய ஸ்தலம் ஷீரடியிலே - ஞானம்
விளக்க அவதரித்த சாய் பகவானே எங்கள் சாய் பகவானே

சாய் ராம் ஜய ஜய சாய் ராம்
சாய் ராம் ஜய ஜய சாய் ராம் (2)

ஏழையர்க்கும் எளியவர்க்கும் அருள் தெய்வமே - நல்ல
வாழ்வு தந்து காத்து நிற்கும் உயர் தேவனே
கிருஷ்ண ராம சிவ மாருதி ஷீரடி வாசனே
கஷ்டங்கள் தீர்த்து வைக்கும் சாய் ராமனே - என்
கஷ்டங்கள் தீர்த்து வைக்கும் சாய் ராமனே (நா மணக்க)

தேவர் போற்றும் முனிவர் போற்றும் வேத ரூபன் நீ
மூவுலகில் தர்மம் காக்கும் ஞான சீலன் நீ
யாவர்க்கும் கருணைக் காட்டும் ஆண்டவனும் நீ - என்
தேவைகளைப் பூர்த்தி செய்யும் சாய் நாதன் நீ (நா மணக்க)

1 comment:

  1. Sai Ram Sai Ram Sai Ram
    Merciful Guru leading to Light

    ReplyDelete

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita